இனி தமிழில் பொறியியல் படிக்கலாம். ஏஐசிடிஇ அறிவித்தது!!

இனி தமிழில் பொறியியல் படிக்கலாம். ஏஐசிடிஇ அறிவித்தது!!

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

தற்போது வரைக்கும் ஆங்கில மொழியில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் பொறியியல் பாடங்களை, தாய் மொழிகளில் கற்பிக்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. அதன்படி வரும் ஜூன் மாதம் முதல் தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பொறியியல் பாடங்களை கற்பிக்கலாம்.

இதனால் கிராமப்புற மாணவர்களும் பொறியியல் படிப்பைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவர். அதேபோல், பொறியியல் படிப்பைத் தாய்மொழியில் எளிதாக புரிந்துகொண்டு மாணவர்கள் படிக்கலாம். இதன் மூலம் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.