கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்...தமிழக அரசின் முன்னெடுப்பை வரவேற்பதாக விர்சா பெர்கின்ஸ் பேச்சு!

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம்...தமிழக அரசின் முன்னெடுப்பை வரவேற்பதாக விர்சா பெர்கின்ஸ் பேச்சு!

கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் அதுல் ஆனந்த் வரவேற்புரை வழங்க, கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நபி தலைமை உரை ஆற்றினார். இதையடுத்து கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பில்  சிறப்பாக செயல்பட்ட அரசு அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட முன்னாள் கொத்தடிமை தொழிலாளர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதால், அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. 

இதையும் படிக்க : ஈரோடு : அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக...ஜி.கே.வாசன் பேச்சு!

இதற்கிடையில் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய சென்னை அமெரிக்க தூதரக  தலைமை அலுவலர் விர்சா பெர்கின்ஸ், கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு முறையை அமெரிக்கா தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதேபோன்று இந்தியாவில் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதில் தமிழகம் சிறந்த திட்டங்களை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதனால் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பில்  தமிழக அரசின் முன்னெடுப்பை சென்னை அமெரிக்க தூதரகம் வரவேற்பதாக கூறினார்.