ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக மறு நிர்ணயம் செய்ய - தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்...!

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக மறு நிர்ணயம் செய்ய - தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தல்...!

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக மறு நிர்ணயம் செய்து கட்டண அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக அரசை ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உடனடியாக மறு நிர்ணயம் செய்து கட்டண அறிவிப்பை வெளியிட வேண்டும் என வலியுறுத்தி சென்னை தலைமை செயலகத்தில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் அலுவலகத்தில் தொ.மு.ச, சி. ஐ.டி.யூ உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.  

பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஆட்டோ குறைந்த பட்ச கட்டணமாக 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் அடுத்த ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கும் 25 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என வலியுறித்தினர்.