குரங்கை  காப்பாற்ற முயற்சி செய்த ஆட்டோ டிரைவர்... முதல்வர் ஸ்டாலின் பாராட்டு 

பெரம்பலூரில் சாலையில் அடிபட்டு உயிருக்கு போராடிய குரங்கை  காப்பாற்ற முயற்சி செய்த ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரை சேர்ந்த பிரபு என்ற நபர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல அவர் சவாரிக்கு சென்று கொண்டிருந்தபோது அந்த சாலையில் குரங்கு ஒன்று வாகனம் மோதியதால் அடிப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்துள்ளது.

உடனடியாக ஓடி சென்று அந்த குரங்கிற்கு முதலுதவிகள் செய்த பிரபு அந்த குரங்கை உயிருடன் காப்பாற்றியுள்ளார். இந்த சம்பவத்தை அப்பகுதி வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். உயிர்களிடம் கருணை காட்டும் ஆட்டோ டிரைவரின் மேன்மையை பலரும் பாராட்டி  வந்தனர். இந்நிலையில் அந்த ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.