சென்னை பச்சையப்பன் கல்லூரி: மாணவரிடம் சாதி ரீதியாக அணுகும் ஆசிரியரின் வீடியோ வைரல்..!

சென்னை பச்சையப்பன் கல்லூரி: மாணவரிடம் சாதி ரீதியாக அணுகும் ஆசிரியரின் வீடியோ வைரல்..!

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சாதியை வைத்து மாணவர்களை மதிப்பிடும் தமிழ்த்துறைத் தலைவரின் ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி  தமிழ்துறைத் தலைவரின் ஆடியோ:

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்துறைத் தலைவராக பணியாற்றி வருபவர் அனுராதா. இவர் தனது கல்லூரி மாணவர் ஒருவரிடம், சாதிய பாகுபாட்டுடன் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. முகத்தைப் பார்த்தாலே BC, MBC-யா என கண்டுபிடித்து விடுவேன் எனக்கூறி, பேசிக் கொண்டிருக்கும் மாணவனின் சாதியையும் நைசாகக் கேட்கும் அவர், தொடர்ந்து மற்றவர்களின் சாதியைக் கேட்டவாறே இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

விசாரணை:

இந்நிலையில் இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணைக்கு அழைத்தபோது, அவர் ஒத்துழைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனிடையே விசாரணையில், கடந்த ஆண்டும் இதேபோல் சாதிப் பாகுபாட்டுடன் பேசிய சர்ச்சையில், காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பா கல்லூரிக்கு  அனுராதா பணிமாற்றம் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் இந்த உத்தரவுக்கு தடைபெற்று மீண்டும் சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கே அனுராதா மாற்றப்பட்ட தகவலும் வெளியாகியுள்ளது.