ஆடியோ விவகாரம்...அண்ணாமலை சவால்...!

ஆடியோ விவகாரம்...அண்ணாமலை சவால்...!

கோயில் இடிப்பு விவகாரம் குறித்து தமிழ்நாடு அமைச்சர்கள் பேசியவற்றை தடயவியல் ஆய்வு செய்து, அது உண்மையில்லை என நிரூபணம் ஆனால் அரசியலைவிட்டு விலக தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

அண்ணாமலை சவால் :

கோவை ஈச்சனாரியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, அமைச்சர் கே.என்.நேரு மற்றும் டி.ஆர்.பாலு பேசியவற்றை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் எனவும், நிரூபிக்கவில்லை எனில் முதலமைச்சர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

எடிட் செய்து வெளியிட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்திருக்கும் நிலையில் அவர் சொல்லும் இடத்தில் வீடியோவை தரத் தயார் எனவும், அதனை முதலமைச்சர் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தலாம் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிக்க : 30 நிமிடங்கள்...தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்...!

அதனை தொடர்ந்து பேசிய அவர், பிரதமர் மோடி குறித்த பிசிசி ஆவணப்படத்தில் உண்மை இல்லை எனவும், அதனை தாரளமாக திரையிடலாம் என கூறினார். மேலும் ஆவணப்படத்தை மறைக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என தெரிவித்த அவர் அதைப் பற்றி கவலை இல்லை என தெரிவித்தார்.

இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தல் தான் எங்களின் இலக்கு எனவும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜகவின் பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தெரிவித்தார்.