சோதனை ஓட்டத்தில் அத்தி கடவு அவினாசி திட்டம் : அமைச்சர் விளக்கம்

சோதனை ஓட்டத்தில் அத்தி கடவு அவினாசி திட்டம் : அமைச்சர் விளக்கம்
Published on
Updated on
2 min read

ஈரோடு மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாகவும்

அத்திக்கடவு அவினாசி திட்ட பணியில் உள்ள மொத்த தொலைவு 106.8 கிலோமீட்டர் தூரம் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது அதனை இன்று ஆய்வு செய்ய உள்ளோம் அதன் பின்னர் திட்டம் திறப்பு விழாவிற்கான தேதி அறிவிக்கப்படும் என தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி.

நலத்திட்ட உதவி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய பின்னர் தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி

கல்லூரி மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில்,பல்வேறு திட்டங்களின் கீழ் திருமண நிதியுதவி & திருமாங்கல்யத்திற்கு தங்கம் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவியர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மாநில வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பட்டு வளர்ச்சித் துறையில் 6 விவசாயிகளுக்கு 6.63 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது மேலும் அதிக விளைச்சலை முதல் ஈட்டிய மூன்று விவசாயிகள் தேர்வு செய்து அவர்களுக்கும் சிறப்பு பரிசாக 25,000 20,000 15,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. புதுமைப்பெண் திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 2169 மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் இன்று வழங்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இரண்டு கட்டங்களாக 6310 மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் புதுமைப்பெண் திட்டம் வழங்கப்படுகிறது.

10 மாதத்திற்கு 7500 ரூபாய்

இந்திய குடிமையியல் தேர்வில் பங்கேற்பவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 10 மாதத்திற்கு 7500 ரூபாயும் இரண்டாம் நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தாலிக்கு தங்கம் பெறும் பயனாளிகள் 335 பேருக்கு 3.52 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் வழங்கப்பட உள்ளது.

அத்திக்கடவு அவினாசி திட்ட பணியில் உள்ள மொத்த தொலைவு 106.8 கிலோமீட்டர் தூரம் பணிகள் நிறைவடைந்து சோதனை ஓட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது அதனை இன்று ஆய்வு செய்ய உள்ளோம் அதன் பின்னர் திட்டம் திறப்பு விழாவிற்கான தேதி அறிவிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் தொழிற்பூங்கா அமைப்பதற்கு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி கல்லூரியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அங்கு அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com