ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்வோர் ஆன்மீகவாதிகள் இல்லை - மு.க.ஸ்டாலின் உரை!

ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்வோர் ஆன்மீகவாதிகள் இல்லை - மு.க.ஸ்டாலின் உரை!

திருவண்ணாமலைக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அரசு விழாவில் கலந்துக்கொண்டு முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்ததோடு, ஒரு லட்சத்திற்கும் பேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மேலும், ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் உண்மையான ஆன்மீகவாதிகள் இல்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பல்வேறு நலத்திட்ட பணிகளை திறந்து வைத்த மு.க.ஸ்டாலின்:

திருவண்ணாமலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக முதல்வர்  மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவண்ணாமலை சென்றார். அங்கு இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், 639 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 1 லட்சத்து 74 ஆயிரம் பயனாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து 70 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்தார்.

அரசு விழாவில் பேசிய முதல்வர்:

இதையடுத்து நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், திருவண்ணாமலையை தனி மாவட்டமாக அறிவித்தவர் கலைஞர் கருணாநிதி என சுட்டிக்காட்டினார். இந்த மாவட்டத்தில் இருந்தே பல்வேறு பயணங்களை தொடங்கியதாக கூறிய அவர், மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்வோர் உண்மையான ஆன்மீகவாதிகள் இல்லை எனவும் மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு திமுக வரலாறு தெரியாது எனவும் குறிப்பிட்டார். மேலும் அறிவார்ந்தவர்களின் ஆலோசனையினை எப்போதும் செயல்படுத்துவோம் என குறிப்பிட்ட முதலமைச்சர், மலிவான விளம்பரம் தேடும் வீணர்களைப் பற்றி தனக்கு கவலை இல்லை எனவும் தெரிவித்தார்.