கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம்.. முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி!!

கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம்.. முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி!!

மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, அமைதி ஊர்வலம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அவரது நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

கலைஞரின் சிலையைத் திறந்து வைத்த முதல்வர்

முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அவரது நினைவைப் போற்றும் வகையில் திமுக சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆல்கால் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் கருணாநிதியின் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

இதைத்தொடர்ந்து ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி அமைவிடம் வரை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அமைதிப்பேரணி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடி எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை

2 ஆண்டுகளுக்குப்பின் கலைஞர் நினைவு தினம் அரசால் பொதுவெளியில் பிரமாண்டமாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் நிறைவாக காமராஜர் சாலையில் உள்ள அவரது கலைஞரின் நினைவிடத்தில், முதலமைச்சர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.