61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகு மீண்டும் கலைகட்டிய மீன் வியாபாரம்...

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 61 நாட்களுக்கு பிறகு மீண்டும் மீன் விற்பனை தொடங்கியதால், அண்டை மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

61 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிந்த பிறகு மீண்டும் கலைகட்டிய மீன் வியாபாரம்...

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில், நேற்று அதிகாலை தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 120 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர். பின்னர் இரவு 9 மணி முதலாக விசைப்படகுகள் கரை திரும்பின.

அயிலை, வஞ்சிரம், பாறை, காரல், சாளமீன் மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் விளமீன், சீலா, வருவால் ஊழி, கருப்பு ஊழி உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களும் ஏராளமாக கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், 61 நாட்கள் தடைக்காலம் முடிந்த நிலையில் வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீன் வியாபாரிகள் தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் முகாமிட்டு, மீன்களை வாங்கிச் சென்றனர். தொடர்ந்து அரசின் வழிக்காட்டுதலோடு மீன்பிடி தொழிலில் ஈடுபட தயாராக உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.