ரஜினிகாந்தை கைது செய்யுங்கள்... காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்த வழக்கறிஞர்...

நடிகர் ரஜினிகாந்தை கைது செய்யக்கோரி வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் காவல்துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ரஜினிகாந்தை கைது செய்யுங்கள்... காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்த வழக்கறிஞர்...

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. அண்மையில் இப்பபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இப்படத்தின் 50 அடி உயர  போஸ்டருக்கு ரஜினிகாந்தின் ரசிகர்கள், ஆடு ஒன்றை அனைவரது மத்தியில் நிறுத்தி பட்டப்பகலில் பொது இடத்தில் ஆளுயர பட்டா கத்தியில் வெட்டி துடிதுடிக்க அதன் அர்த்தத்தை பாத்திரத்தில் பிடித்து ரஜினிகாந்தின் உருவ படத்துக்கு அபிஷேகம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் வைரலானது.

பொது இடத்தில் பதபதவைக்கும் நிகழ்வை அறங்கேற்றிய  ரசிகர்கள் மீது எவ்வித கண்டனத்தையும் பதிவிடாத ரஜினிகாந்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் என கூறி, வழக்கறிஞர் தமிழ்வேந்தன் காவல்துறை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.  ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்வோம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.