தீயில் தள்ளி தான் பெண்களுக்கு பெருமை சேர்க்கப்போகிறீர்களா? – மக்களவையில் கனிமொழி எம்.பி பேச்சு

தீயில் தள்ளி தான் பெண்களுக்கு பெருமை சேர்க்கப்போகிறீர்களா? – மக்களவையில் கனிமொழி எம்.பி பேச்சு

திமுக எம்.பி கனிமொழி


திமுக எம்.பி கனிமொழி மக்களவையில் உரையாற்றிய போது பேசிய அவர், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா என்னவானது? தீயில் தள்ளி தான் பெண்களுக்கு பெருமை சேர்க்கப்போகிறீர்களா?

மேலும் படிக்க| கொத்தடிகளாக இருந்த வடமாநில சிறுவர்கள் 24 பேர் சென்னையில் மீட்பு

இந்த அரசு ஆட்சிக்கு வந்து 27 முறை நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துள்ளது; தேர்தல் வாக்குறுதியிலும் சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் அந்த மசோதா இதுவரை நிறைவேற்றப்படவில்லை, அதற்காக நீங்கள் ஒன்றும் செய்யவில்லை; நீங்கள் மக்களுக்காகவோ, நலிவடைந்தவர்களுக்காகவோ , ஒடுக்கப்பட்டவர்களுக்காகவோ கவலைப்படவில்லை