"அடையாறு ஆற்றில் வீடு கட்ட ஒப்புதல் அளிக்கக் கூடாது” - பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்

"அடையாறு ஆற்றில் வீடு கட்ட ஒப்புதல் அளிக்கக் கூடாது” - பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
Published on
Updated on
1 min read

அடையாறு ஆற்றில் வீடு கட்டும் திட்டத்திற்கு சி.எம்.டி.ஏ. ஒப்புதல் அளிக்கக் கூடாது என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நந்தம்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் 6 ஏக்கர் நிலத்தை குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதியாக அறிவிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

2015-ஆம் ஆண்டுக்குப்பிறகு பலமுறை செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி அடையாற்றில் வெள்ள நீரை திறந்து விடும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டதாகவும், காலநிலை மாற்றத்தால் இத்தகைய நிகழ்வுகள் வரும் காலத்தில் அதிகரிக்க கூடும் என்பதால் அடையாற்றின் நீரோட்டத்திற்கு தடையாக இருப்பதாக கூறப்படும்  நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளையோ, தொழிற்சாலைகளையோ கட்ட அனுமதிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com