கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்...

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்...

தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் இரண்டாவது கொரோனா அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 10ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. வருகிற 31 ம் தேதியுடன் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று அதிகாரிகள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கொங்கு மண்டலத்தில் கோவை , திருப்பூர் , ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதாகவும், அதனை கட்டுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கோவையில் சித்திக், திருப்பூர் மாவட்டத்தில் சமயமூர்த்தி, ஈரோடு மாவட்டத்தில் செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.