திமுகவில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்..! முழு விவரம்..!

திமுகவில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம்..! முழு விவரம்..!

திமு கழக அமைப்பில் உள்ள 72 மாவட்டங்களில் 71 மாவட்ட செயலாளர்கள் நியமனம். 7 பேர் மாற்றம்.

திமுக உட்கட்சி தேர்தல்:

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றது. மாவட்ட செயலாளர், அவைத்தலைவர், 3 துணைச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது.

முடிவுகள்:

72 கழக மாவட்டங்களுக்கும் வேட்பு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிவுகள் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நேற்று திமுக சார்பில் 15வது பொதுத்தேர்தல் தொடர்பான பட்டியல் வெளியானது. திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரை முருகன் இந்த பட்டியலை வெட்டியிட்டார்.

மேலும் படிக்க: சசிகலா புஷ்பாவிற்கு பாலியல் தொந்தரவு..! பாஜக பிரமுகர் மீது புகார்..!

பட்டியல் விவரம்:

அதன்படி, 64 திமுக மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுக அமைப்பில் உள்ள 72 மாவட்டச் செயலாளர்களில் 7 மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றம் செய்த இடங்கள்:

  1. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்
  2. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்
  3. கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர்
  4. கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்
  5. திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர்
  6. தருமபுரி  மேற்கு மாவட்ட திமுக செயலாளர்
  7. தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மாற்றப்பட்டுள்ளனர்.

தென்காசி வடக்கு மாவட்டம்:

தேர்தல் நடத்தாமலேயே திமுக எம்பி தனுஷ் குமாரை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக தேர்வு செய்ய முயற்சிப்பதாக குற்றம்சாட்டி தென்காசி வடக்கு மாவட்டத்தின் தற்போதைய பொறுப்பாளர் செல்லதுரையின் ஆதரவாளர்கள் அண்ணா அறிவாலயம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் தொடர் குழப்பம் நிலவி வருவதால் இந்த மாவட்டத்துக்கு மட்டும் மாவட்ட செயலாளர் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அமைப்பு செயலாளர்:

மேலும் திமுகவின் புதிய அமைப்பு செயலாளராக அன்பகம் கலை நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்த ஆர்எஸ் பாரதி, திமுக செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.