”தமிழ்நாட்டில் எந்த திட்டமாக இருந்தாலும்....” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

”தமிழ்நாட்டில் எந்த திட்டமாக இருந்தாலும்....” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தேசத்தின் வளர்ச்சிக்கு, கிராமப்புறங்களின் வளர்ச்சி மிக முக்கியமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

மாநில அளவிலான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளை சார்ந்த எம்.பி-க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். இதில்  பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர்களால், சுமார் மூவாயிரத்து 43 ஊரக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறிய முதலமைச்சர், ஊரகப் பகுதிகளில் வளர்ச்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார். 

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் ”ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டம் அமலில் உள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம், அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு வாரம் மூன்று முட்டைகள், செறிவூட்டப்பட்ட பிஸ்கட்டுகள் வழங்கப்படுவதாகவும் முதலமைச்சர் கூறினார். மேலும், பொதுமக்களுக்கு சமமான, தரமான மருத்துவ சேவை வழங்கிட வேண்டுமென்றும்  முதலமைச்சர் வலியுறுத்தினார்.

தமிழ்நாட்டில் எந்த திட்டமாக இருந்தாலும் கடைகோடி மக்களை சென்றடைய வேண்டுமென்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க:   மத்திய ஆசிய நாடுகளில் அதிகார பரவலாக்கம் சாத்தியமாகுமா?!!