அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டு!!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டு!!

அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் அடுத்தடுத்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அண்மையில், முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது. இதே போன்று முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜய பாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே. சி வீரமணி உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். 

இந்தநிலையில், இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு  சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அவரது வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கே.பி.அன்பழகனின் மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.