பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தம் - ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு!

பொதுத்தேர்வு விடைத்தாள்கள்  திருத்தம் - ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு!

பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் அறையில் எக்காரணம் கொண்டும் அலைபேசியை பயன்படுத்தக் கூடாது என்று  அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தங்களுக்கு வழங்கப்பட்ட விடைத்தாள்களை ஒருநாள் மட்டுமே மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும், விடைத்தாள் மதிப்பீட்டு பணியினை செய்யும்போது முதன்மை தேர்வாளர்கள் பச்சை நிறமையை பயன்படுத்த வேண்டும் என்றும், பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் அறையில் எக்காரணம் கொண்டும் அலைபேசியை பயன்படுத்தக் கூடாது மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க : சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து வீசியெறிந்து ஆவேசம்...இரு அவைகளும் ஒத்திவைப்பு!

விடைத்தாள் திருத்தும் போது, குழுவினருடன் பேசிக்கொண்டே விடை தாள்கள் திருத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும், விடைத்தாள்களை திருத்துவோர் அடிக்கடி வெளியில் சென்று வருவதை தவிர்க்க வேண்டும் என்றும், முகாம் நடக்கும் வளாகத்திற்குள் எவ்வித கூட்டமும் நடத்த அனுமதிக்க கூடாது 
போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.