தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட கொடுமை...

நீட் தேர்வு தோல்வி பயத்தால் வேலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட கொடுமை...
Published on
Updated on
1 min read

நீட் தேர்வினால் மாணவ – மாணவிகள் தொடர்ந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. தமிழகத்தை பொருத்தவரை நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக மத்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் இந்தாண்டும் நீட் தேர்வு நடைபெற்றது.

இருப்பினும் நீட் தேர்வில் தோல்வியடைந்து விட்டால் மருத்துவராக வேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் மாணவ – மாணவிகள் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களில் மூன்று மாணவ- மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மேட்டூரை சேர்ந்த மாணவன் தனுஷ் என்பவர் நீட் தேர்வு பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் , நேற்று அரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி செளந்தர்யா தற்கொலை செய்துகொண்டார். மாணவி செளந்தர்யா நீட் தேர்வு தோல்வி பயத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட தேர்வினால் மாணவர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com