கிராம சபா குறித்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு...!

கிராம சபா குறித்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு...!

குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் :

குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் 26ம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. அந்த கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சங்கள் குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனவும், அனைத்து குக்கிராமங்களிலும் துப்புரவு பணியை முழுமையாக மேற்கொள்ளுதல், அனைத்து அரசு அலுவலகங்களை சுத்தம் செய்தல், சுத்தமான குடிநீரை விநியோகம் செய்வதை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிக்க : தமிழின் சிறப்பு பலருக்கும் தெரியல்... தமிழ்நாடு ஒரு சிறந்த இடம்...அறிவுரை வழங்கிய ஆளுநர்!

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் :

மேலும், தனிநபர் சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறத் தூய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் முழுமையாக தடை செய்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் மற்றும் பிளாஸ்டிக் இல்லாத கிராமங்களை உருவாக்குதல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன் திறந்தவெளியில் மலம் கழிக்காமல் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல், கூட்டு குடிநீர் திட்டங்களின் செயல்பாடு மற்றும் திட்டத்தின் முழுமையான விவரத்தை கிராம சபையில் விரிவாக எடுத்துரைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, பெண்களை முன்னேற்றும் மூவலூர் ராமாமிர்தம் நினைவு உயர் கல்வி உறுதி திட்டம் பற்றி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.