தமிழகத்தில் பி-டீமாக செயல்படுகிறது காங்கிரஸ்!! பாஜக மாநில துணைத் தலைவர் விமர்சனம்..

மின்தடைக்கான அறிவியல் காரணங்களை ஆராய வேண்டும்!!

தமிழகத்தில் பி-டீமாக செயல்படுகிறது காங்கிரஸ்!! பாஜக மாநில துணைத் தலைவர் விமர்சனம்..

தமிழ்நாட்டில் திமுகவின் பி-டீமாக காங்கிரஸ் கட்சி செயல்படுவதாக பாஜக மாநிலை துணைத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். 

கடந்த சில தினங்களாக இணையங்களில் தெரிக்க விடும் டாபிக் என்றால் அது அணில்களால் மின்சாரம் தடைபடுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியது தான். தற்போது அடிக்கடி மின்சார தடை ஏற்படுவதற்கு, மின்சார கம்பிகளில் அணில்கள், பறவைகள் அமரும் போதோ, ஓடும் போதோ இரண்டு லைன்கள் ஒன்றாகி மின்சார தடை ஏற்படும் என கூறியிருந்தார். 

இதுபோன்ற கருத்துகள் தமிழ்நாட்டு மக்களுக்கு புதுசு என்பதால், நெட்டிசன்களும், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இணையங்களில் செந்தில் பாலாஜியின் கருத்துகளை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்யத் துவங்கிவிட்டனர். 

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, பாமக நிறுவனர் ராமதாஸ் என பலரும் அமைச்சர் செந்தில்பாலாஜியை கிண்டல் செய்யத் துவங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவிலும் அணில்கள் மூலம் மின்சார தடை ஏற்படுவதாகவும், அதிமுக ஆட்சியின் போது உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நடைபெற்ற வழக்கின் போது நீதிபதிகள் குறிப்பிட்டதையும் ஆதாரமாக விளக்கினார் அமைச்சர் செந்தில் பாலாஜி. 

இது ஒருபுறம் இருக்க பாஜக மாநில துணைத் தலைவரான அண்ணாமலை கரூரில் பேட்டியளித்த போது, தமிழ்நாட்டில் ஏற்படும் மின்தடைக்கு தேவையற்ற காரணங்களை கூறுவதை தவிர்த்து, அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தேசிய கட்சியாக இருந்த காங்கிரஸ் தமிழ்நாட்டில் பிராந்திய கட்சியாக மாறிவிட்டதாகவும், திமுகவிற்கு பி-டீமாக செயல்படுவதாகவும் விமர்சனம் செய்திருந்தார். 

இதே கேள்விகளை கடந்த அதிமுக ஆட்சியின் போது பலர் இவரிடம் கேட்டிருந்தால் என்ன பதில் அளித்திருப்பார் என்பது தான் பலரின் மனக் குரலாக உள்ளது.