தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை..! கடும் கோபத்தில் தமிழ்நாடு மக்கள் - அண்ணாமலை கடும் விமர்சனம் 

தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை..! கடும் கோபத்தில் தமிழ்நாடு மக்கள் - அண்ணாமலை கடும் விமர்சனம் 

அரசியலமைப்பு விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, திமுக அரசைக் கடுமையாக சிமர்சித்துள்ளார்.

அரசியலமைப்பு நாள்:

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவ. 26ஆம் தேதி இந்தியா அரசியலமைப்பு அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள்நடைபெற்றது. சென்னை எழும்பூரில் தனியார் நிறுவனம் சார்பாக அரசியலமைப்பு விழிப்புணர்வு பேரணி நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

Constitution Day Explained 26 नवंबर को भारतीय संविधान दिवस क्यों मनाया जाता  है | Constitution Day 2022: Why India Celebrates Samvidhan Divas on  November 26 - Hindi Careerindia

பிரதமர் மோடியே செய்தார்:

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்ற உடன் பிரதமர் மோடி, நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு சட்ட நாளாக அறிவித்தார். இந்தியாவில் 1950இல் அரசியலமைப்பு சட்டம் அரசியல் சாசனமாகக் கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த நவம்பர் 26ஆம் தேதியை அரசியலமைப்பு நாளாக அறிவிக்க வேண்டும் என்று இதற்கு முன்பு இருந்த எந்தவொரு பிரதமரும் யோசித்தது கூட இல்லை. ஆனால், பிரதமர் மோடி இதைச் செய்து அரசியலமைப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

ஹலோ அண்ணாமலை'... தோளை தட்டி நலம் விசாரித்த பிரதமர் மோடி - நெகிழ்ந்த அண்ணாமலை

இதையும் படிக்க: ஈபிஎஸ்சிடம் பேச்சு போட்ட பாஜக மேலிடம்...அமைதி ஆன எடப்பாடி!

தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை:

இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழ்நாட்டில் பல கட்சிகள் சும்மா பெயருக்கு இருக்கிறார்கள்.. அவர்களில் பலர் தேசவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்திய நாட்டிற்காகப் பாடுபடும் ராணுவ வீரரின் குடும்பத்தினரையும் விடாமல் மிரட்டி வருகிறார்கள். அந்த ராணுவ வீரருக்கு பாஜக எப்போதும் துணை நிற்கும். சில ஊடகங்களில் வரும் பொய்யான தகவல்களுக்கும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோருக்கும் பதிலளித்து என்னை நானே தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை எனக் குறிப்பிடுள்ளார்.

Not Jesus': Annamalai justifies Twitter outbursts against PTR

கடும் கோபத்தில் மக்கள்:

மேலும், தமிழ்நாடு மக்கள் இப்போது திமுக அரசு மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். தமிழ்நாடு அரசு மீது மக்களின் வெறுப்பு அதிகரித்த கொண்டே செல்கிறது. இவ்வளவு நடந்தும் கூட திமுக மாறியதாகத் தெரியவில்லை. இன்னுமே கூட திமுக தவறான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது எனக் குற்றம் சாட்டியவர்,  மக்கள் திமுகவுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள் எனவும் கூறியுள்ளார்.

Annamalai's First Big Election Shows Tamil Nadu BJP Can Put Up A Fight

பாஜக வளர்ச்சி:

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பால் விலை உயர்வைக் கண்டித்து பாஜக மாநிலம் முழுக்க போராட்டம் நடத்தினோம். இதற்கு மக்கள் பெரியளவில் ஆதரவு அளித்தனர். இதுவே பாஜகவின் வளர்ச்சியைக் காட்டுகிறது. அடுத்து நாங்கள் நடத்தும் போராட்டம் சுமார் 5000 இடங்களில் பிரம்மாண்டமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.