அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை கழக தேடல் குழு அறிவித்துள்ளது. 

சென்னை அண்ணா பல்கலைகழக துணைவேந்தராக இருந்த சூரப்பா மீது ஊழல் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக தமிழக அரசு தாமாக முன்வந்து சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான ஆணையத்தை நியமித்தது. இதனிடையே சூரப்பாவின் பதவி காலம் முடிந்ததை அடுத்து, கடந்த 2021, ஏப்ரல் மாதம் 11-ம் நாள் பணி ஓய்வுபெற்றார். 

எனவே தற்போது அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாகவுள்ளதால் அப்பதவிக்கு பதவிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை கழக தேடல் குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள ஜெகதீஷ் குமார், ஷீலா ராணி சுங்கத், தியாகராஜன் ஆகியோர் அடங்கிய தேடல் குழுவினர், விருப்பமுள்ள, தகுதியான நபர்கள் www. annauniv.edu இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஜூன் 30-ம் தேதிக்குள் nodalifficer2021@ annauniv.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர். மேலும், தேர்வு செய்யப்படும் துணைவேந்தர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பணியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.