நாடாளுமன்ற பக்கமே போகமால் ஆப்சென்ட் ஆகும் அன்புமணி!!.இப்படி இருந்தால் எப்படி அய்யாவின் முதல்வர் கனவு நிறைவேறும் புலம்பும் பாமகவினர்....

குளிர்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாளில் தமிழக எம்.பி.,க்களில்  பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மட்டும் பங்கேற்கமால் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற பக்கமே போகமால் ஆப்சென்ட் ஆகும் அன்புமணி!!.இப்படி இருந்தால் எப்படி அய்யாவின் முதல்வர் கனவு நிறைவேறும் புலம்பும் பாமகவினர்....

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கி வரும் டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளே மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி தேசிய மற்றும் மாநில நலன் சார்ந்த பல்வேறு விவாதங்கள், கேள்விகளை எழுப்ப தமிழக எம்.பிக்கள் முதல் நாளில் இருந்தே தொடங்கிவிட்டனர். இதையொட்டி தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை எம்.பிக்கள் 18 பேரில் கனிமொழி, ப்செதம்பிதுரை, வைகோ, நவநீத கிருஷ்ணன், விஜயகுமார், அந்தியூர் பி.செல்வராசு, ஜி.கே.வாசன், கே.ஆர்.என் ராஜேஷ் குமார்,

முகமது அப்துல்லா, சண்முகம், சந்திரசேகரன், இளங்கோ, வில்சன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், டி.கே.எஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகிய 17 பேர் முதல் இரண்டு நாட்களும் வருகை புரிந்திருந்தனர். ஆனால் பாமக மாநிலங்களவை எம்.பி அன்புமணி ராமதாஸ் மட்டும் வரவில்லை. இது சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த விஷயங்களை பேசுவதற்காக தானே நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அப்படியிருக்கையில் அவைக்கு செல்லாமல் இருப்பது எப்படி சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியும் நெட்டிசன்கள் பலரும் காலாய்த்து வருகின்றனர்.

தற்போது மட்டுமல்ல இதற்கு முன்பும் மோசமான வருகைப் பதிவை வைத்திருக்கும் நபராக அன்புமணி ராமதாஸ் செயல்பட்டிருப்பது அந்த கட்சி தொண்டர்களிடையே முகசுளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, தங்களுக்கு கிடைத்த ஏழு தொகுதிகளிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து அதிமுக சார்பில் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது. அதில் அன்புமணி நின்று வெற்றி பெற்றார். 2019 செப்டம்பர் முதல் மாநிலங்களவை எம்.பியாக அன்புமணி ராமதாஸ் பதவி வகித்து வருகிறார். இதையடுத்து நடந்த முதல் குளிர்கால கூட்டத்தொடரில் 20 அமர்வுகளில் 5ல் மட்டுமே அன்புமணி கலந்து கொண்டார்.


2020 ஜனவரியில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரின் 23 அமர்வுகளில் 2ல் மட்டுமே பங்கேற்றார். அதே ஆண்டு செப்டம்பரில் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் 10 அமர்வுகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தொடர் முழுவதும் விடுமுறையில் இருந்ததாக மக்களவை இணையதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. நடப்பு ஜனவரியில் நடைபெற்ற 54 நாட்கள் நடைபெற்ற 
பட்ஜெட் கூட்டத்தொடரில் 35 நாட்கள் மேல் வரை விடுமுறையில் இருந்துள்ளார். விடுமுறை முடிந்த பிறகு கூட அவைக்கு வரவில்லை. 

இதையடுத்து ஜூலை மாதம் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் 17 அமர்வுகளில் 5ல் மட்டுமே பங்கேற்றுள்ளார். இந்த விஷயம் தமிழக மக்கள் மத்தியில் மட்டுமல்ல பாமகவிற்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக பொதுவெளிகளில் அன்புமணி அதிகம் தலைகாட்டுவதில்லை என்பது ராமதாஸின் பெரிய குறையாகவே இருந்து வருகிறது. கட்சியில் தனக்கு அடுத்து அன்புமணி தான் என்பதை ராமதாஸ் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்.

இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் அன்புமணி ராமாதாஸை வருத்தெடுத்து வருகின்றனர். அதிமுக திமுக-னு மாறி மாறி கூட்டணி வைக்க வேண்டியது. எக்ஸ்ட்ரா ஒரு ராஜ்ய சபா சீட் வாங்க வேண்டியது. ஜெயிச்சுட்டா அடம்பிடிச்சு அமைச்சர் பதவி வாங்க வேண்டியது.. தோத்து போயிட்டா இருக்கிறதே இருக்கு அட்வான்ஸ் புக்கிங் பண்ணி வைச்ச ராஜ்ய சபா பதவி வாங்க வேண்டியது, 

நடிகரிடம் 9 கேள்விகள், இயக்குனரிடம் 10 கேள்விகள் கேட்பது ஆனால், நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விகளும் கேட்ககூட போறதில்லை என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். நாடாளுமன்றத்திற்க்கு போகாமல் வீட்ல ஒக்காந்துகிட்டு இருக்கிற உங்களுக்கு ஏன் ஐயா எம்.பி. பதவி மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக.. சலுகையாக அனுபவித்து வரும் அன்புமணி ராமதாஸ் எம் பி சினிமாவுல எந்த மாதிரி காலண்டர் வருதுன்னு "நோட்" பண்ணிட்டு தொண்டர்களை உசுப்பி விட்டு நடிகர்களிடம் கோடி கணக்கில் காசு கேட்டு
வம்பு இழுப்பதை தான் வேலையாக வைத்துள்ளதாக அவரை விளாசி வருகின்றனர்.

மாச சம்பளம் ரூ.50,000. பயணப்படி மாதம் ரூ.45,000, அலுவலகம் நடத்துவதற்கு ரூ.45,000 மேலும், பதவிக் காலத்தில் இலவச ரயில் பயணம், ஆண்டுக்கு 34 விமானப் பயணங்கள், வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, தொலைபேசி இணைப்பு என பல சலுகைகள் கிடைத்தும் டெல்லி பக்கம் தலைவைத்து கூட படுப்பதில்லை என பொதுமக்கள் பலரும் குமுறி வருகின்றனர்.

 ஆனா உங்க டாடி பெரியய்யா என்னவோ அன்புமணியைப்போல ஒரு திறமைசாலி யாரும் கிடையாது, நம்ம ஆண்ட பரம்பரை,நம்ம தான் தமிழ்நாட்டை ஆளனும் 60 இடங்களில் ஜெயிச்சா போது அன்புமணியை CM ஆக்கிறலாம்னு தொண்டர்களுக்கு மத்தியில் கர்சித்து வருகிறார். ஆனால் நீங்கள் என்னமோ நாடாளுமன்றத்திற்கு போகாமல் கட் அடித்து விட்டு தமிழ் சினிமா நடிகர்களிடம் வம்பு இழுப்பது கொண்டு இருந்தால் எப்படி CM ஆவது, எப்படி தமிழகத்தை ஆளுவது...? 

உங்களை போல தானே திருமாவளவன்... அவ்வளவு மழை வெள்ளத்திலும் chair ஐ வரிசையாக  அடுக்கி தொண்டர்களை தள்ள வைத்து டெல்லிக்கு போகவில்லையா..? இப்படி அதிமுகவிடம் இருந்து ஏமாற்றி வாங்கிய பதவியை பயன்படுத்தாமல் , இவ்வாறு வீணடிப்பது எந்தவிதத்தில் நியாயம் என்று அக்கட்சியினர்களே குமுறி வருகின்றனர். மழை, வெள்ள சேதங்களையும் பார்வையிட போகாம, மாநாடு படத்துல எதாவது தேறுமா?-ன்னு, படம் பார்த்திட்டு இருந்துடுப்பாருனு நெட்டிசன்கள் காமெண்ட்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.