பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு...!கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ...

பாமக புதிய தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்வு...!கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்!

பாமகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஜிகே மணி அழைப்பு விடுத்திருந்தார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தவறாமல் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பாமக தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை முன்னாள் தலைவர் ஜி.கே. மணி வெளியிட அரங்கத்தில் கூடியிருந்த அக்கட்சி தொண்டர்கள் உற்சாக குரல் எழுப்பினர்

தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்புமணி, கட்சியின் நிறுவனத் தலைவரும், தனது தந்தையுமான ராமதாசுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார். இதனைத் தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர். பாமக சார்பில் அன்புமணிக்கு செங்கோல் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணியின் தலைமையில் 2024 ம் ஆண்டு பாமகவின் பக்கமே தமிழகம் நிற்கும் என்று தெரிவித்தார்.