”கேக் வெட்டினா பர்த்டே பார்ட்டி, நாக்கை வெட்டினா அது...”ரைமிங்கா பேசிய அமைச்சர்...!

”கேக் வெட்டினா பர்த்டே பார்ட்டி, நாக்கை வெட்டினா அது...”ரைமிங்கா பேசிய அமைச்சர்...!

கேக் வெட்டி கொண்டாடினால் பர்த்டே பார்ட்டி, நாக்கை வெட்டி கொண்டாடினால் அது பாரதிய ஜனதா பார்ட்டி என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்:

கும்பகோணம் மாநகர திமுக சார்பில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கும்பகோணத்தில் ஏழை எளியோருக்கு நலத்திட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது. மாநகர செயலாளர் சு.ப.தமிழழகன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி கொண்டாடிய பின்னர், 500க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதையும் படிக்க: வருகிற டிசம்பர் 14...வந்தது அதிகாரப்பூர்வ தகவல்...அமைச்சராகிறார் உதயநிதி!

முன்னணியில் இருக்கும் இளைஞரணி:

அதன்பின் மேடையில் பேசிய அன்பில் மகேஷ், திமுகவில் இளைஞர் அணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட போது, திமுகவில் முப்பது லட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கு விரைவில் எட்டப்பட்டது என்றும், திமுகவில் தற்போது 22 சார்பு அணிகள் உள்ளது, இதில் இளைஞரணி முன்னணியில் உள்ளது என்றும் தெரிவித்தார்.

பாஜகவை விமர்சித்த அன்பில் மகேஷ்:

தொடர்ந்து பேசிய அவர், ”கேக் வெட்டி கொண்டாடினால் அது பர்த்டே பார்ட்டி, நாக்கை வெட்டி கொண்டாடினால் அது பாரதீய ஜனதா பார்ட்டி” என்று கூறி பாரதிய ஜனதா கட்சியை அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சித்துள்ளார்.