மகளிர் முன்னேற்றத்திற்கு ஒன்றிய அரசு தடையாக உள்ளது - கனிமொழி எம்.பி

மகளிர் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது ஒன்றிய அரசு என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

மகளிர் முன்னேற்றத்திற்கு ஒன்றிய அரசு தடையாக உள்ளது - கனிமொழி எம்.பி

திருத்தணியில் உள்ள  பெரியார் நகர் பகுதியில் 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் விளக்கை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று நேரில் வந்து திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது,

ஒன்றிய அரசு மகளிர் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது என்றும் இதுவரை ஒன்றிய அரசு மகளிர்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் கொண்டு வந்ததில்லை இட ஒதுக்கீட்டையும் அமல்படுத்தவில்லை அதற்கான முயற்சிகளையும் செய்யவில்லை என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,  தற்போது நம் தமிழக முதல்வர் பெண்களுக்கு சிறப்பு இலவச பேருந்துகள், வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகத்தை உருமாற்றி உள்ளார் என்றார். மேலும் பெண்கள் முன்னேற்றத்தில் பெண்களுக்கான ஒரு மைல்கல்லாக தற்போது நமது திராவிட முன்னேற்றக் கழகம் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என கூறினார்.