பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா...! போட்டியில் கலந்துக்கொண்ட சீர்திருத்தப்பள்ளி மாணவர்கள்...!

பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத்திருவிழா...! போட்டியில் கலந்துக்கொண்ட சீர்திருத்தப்பள்ளி மாணவர்கள்...!

தமிழக அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் 2022 - 2023 ஆண்டுக்கான கலைத் திருவிழா  கடந்த எட்டாம் தேதி தொடங்கி நாளையுடன் நிறைவு பெறுகிறது. சென்னையில் இருக்கக்கூடிய  93 நடுநிலைப்பள்ளிகள், 48 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 56 மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மொத்தம் 197 பள்ளிகளில் பிரிவு வாரியான போட்டிகளில் மொத்தம் 94,623 மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த கலைத் திருவிழா தமிழக அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

இரண்டாவது நாளாக இன்று நடைபெற்ற நடனப் போட்டியில் சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து அரசு பள்ளிகளிலும் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் இன்று நடைபெற்ற நடனப் போட்டியில், சென்னை காசிமேட்டில் இருக்கக்கூடிய சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலிருந்து 10 மாணவர்கள் கலந்துகொண்டு நடனம் ஆடினர். தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த ஏற்பாடாகவும் தமிழக அரசுக்கும், பள்ளி கல்வித்துறைக்கும் நன்றி தெரிவிப்பதாக அந்த மாணவர்கள் கூறினர்.  

இதையும் படிக்க : சென்னை - யாழ்பாணம் விமான சேவை... இரண்டரை ஆண்டுகளுக்கு  பிறகு மீண்டும் தொடங்கியது...!