ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 3,691 கோடி ரூபாய் ஒதுக்கீடு ...

ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்க ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 3,691 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 3,691 கோடி ரூபாய் ஒதுக்கீடு ...

இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான குடிநீர் வழங்க 2019ம் ஆண்டு பிரதமர் மோடி ஜல் ஜீவன் திட்டத்தை தொடங்கினார் என்றும்  அதன்படி தமிழகத்திற்கு 2021-22ம் ஆண்டிற்கான மானிய தொகை 3,691 கோடி ரூபாய் மத்திய நீர்வள அமைச்சகம் ஒத்துகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது; இது கடந்த ஆண்டை ஒப்பிடும் போது அதிகம் ஆகும். இந்த தொகையால் 2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான மற்றும் சுகாதாரமான நீர் வழங்கலை உறுதி செய்ய முடியும் என மத்திய நீர் வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

2024ம் ஆண்டுக்குள் ஜல் ஜீவன் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் எனவும் குழாய்வழி நீரினை கோரும் அனைத்து கிராமப்புறங்களிலும் திட்டம் தொடங்கப்பட வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சற்கு மத்திய நீர்வள துறை அமைச்சர் கடிதம் எழுதியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தின் கிராம புறங்களில் முதலீடு , வேலை வாய்ப்பு , பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அடுத்த 5 ஆண்டுகளில் 8,436 கோடி ரூபாய் வழங்கப்படும் என  மத்திய அரசு அறிவித்துள்ளது.