விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்கு...மாநகரப் போக்குவரத்து கழகத்தின் முக்கிய அறிவிப்பு...!

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
சிறப்பு பேருந்து இயக்கம் :
பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சென்னை வாசிகளின் வசதிக்காக அரசு கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இதனால் பயணிகள் சிரமமின்றி பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர்.
இதையும் படிக்க : தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது... யாருக்கும் உரிமை இல்லை...கனிமொழி பேச்சு!
சென்னை திரும்பும் பயணிகள் :
இந்நிலையில் பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 125 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் மூலம் சென்னை திரும்பும் பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.