வெளிநாட்டில் கொரோனாவுக்கு பலியான தாய்… 11 மாத குழந்தை விமானத்தில் தமிழகத்திற்கு திரும்பிய நெகிழ்ச்சி..!

வெளிநாட்டில் கொரோனாவால் தாய் உயிரிழந்த நிலையில் 11 மாத குழந்தை ஒன்று தனியாக துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த நிகழ்வு நெகிழ்ச்சியடைச்செய்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வேலவன் என்பவருக்கும் பாரதி என்ற பெண்ணுக்கும் கடந்த 2008-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3-ஆண் குழந்தைகளில் ஒரு மகன் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இந்நிலையில் வறுமையின் காரணமாக அவருடைய மனைவியை கைக்குழந்தையுடன் துபாய்க்கு வேலைக்காக அனுப்பி லைத்துள்ளார் வேலவன். ஆனால் தற்போது கொரோனா உலகையே ஆட்டி படைத்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாரதி வெளிநாட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தனது தாயை இழந்த 11 மாதக்குழந்தை அங்கே தனியே தவித்து வந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து தமிழக முதல்வர் முக. ஸ்டாலினுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் படி, தாயை இழந்த 11 மாத கைக்குழந்தை பத்திரமாக துபாயில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. தனது தந்தை ,சகோதரரை கண்டதும் அவர்களை அக்குழந்தை கட்டித் தழுவிக் கொண்ட உணர்ச்சிபூர்வமான காட்சி காண்போரை கண்கலங்க செய்தது.