தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு... பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு...

மின் நிலையங்கள் மற்றும் மின்மாற்றிகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ள, ஒவ்வொரு சரகத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஏற்படும் மின்வெட்டு... பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு...
தமிழகம் முழுவதும் மின் நிலையங்களில் கடந்த சில மாதங்களாக முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தால் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதற்கு தீர்வு காணும் வகையில், மின்சாரத்துறை சார்பில் 10 நாட்களுக்கு தீவிர பராமரிப்பு பணி மேற்கொள்ள திட்டமிட்டு, அதற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. தினசரி பகுதி வாரியாக மின்தடை செய்யப்படும் இடங்கள் முறையாக அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இந்நிலையில், மின்மாற்றிகள், பழுதடைந்த மின்கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின்பெட்டிகள், துணை மின் நிலையங்கள் உள்ளிட்ட பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு சரகத்திற்கும் தலா 5 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.