தொழிற்சாலைகள் அதிகரிக்க வேண்டி...திமுக எம்பி கனிமொழியிடம் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் கோரிக்கை!

தொழில் நகரமான தூத்துக்குடி வளர்ச்சிக்கு மேலும் பல தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்பி கனிமொழியிடம்  அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம்  சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள் அதிகரிக்க வேண்டி...திமுக எம்பி கனிமொழியிடம் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம்  கோரிக்கை!

அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கத்தின் 2022-24 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா இன்று தூத்துக்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் அகில இந்திய வர்த்தக தொழிற்சங்க தலைவராக டிஆர் தமிழரசு, பொதுச் செயலாளராக சங்கர் மாரிமுத்து, பொருளாளராக ஜேசையா வில்லவராயர், துணைத் தலைவர்களாக பிரேம் வெற்றி, பாலமுருகன், சுரேஷ் குமார், இணைச் செயலாளராக விவேகம் ரமேஷ், ராஜேஷ் பாலச்சந்திரன், மற்றும்  துணை செயலாளராக நார்டன், நிர்வாக செயலாளராக பிரேம் பால்நாயகம் பதவி ஏற்றனர்.

புதிய நிர்வாகிகளுக்கு   தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில்  சமூக நலத் துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி  மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் தொழிலதிபரும், இந்தியன் வெண்ணிலா குழுமத்தின் நிறுவனர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக எம்.பி கனிமொழி  மற்றும் அமைச்சர் கீதாஜீவனிடம்   தூத்துக்குடி நகர வளர்ச்சி குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கப்பட்டது

அதில் தொழில் நகரமான தூத்துக்குடி வளர்ச்சிக்கு மேலும் பல தொழிற்சாலைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்,செயல்படாமல் இருக்கும் உணவு உற்பத்தி தொழில் பூங்கா மீண்டும் செயல் படுத்த வேண்டும், மாநகரில் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.