ஆட்டம் காட்டிய அலையா விருந்தாளி...அலேக்காக பிடித்த வனத்துறையினர்.!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷமுடைய நல்லபாம்பை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்.

ஆட்டம் காட்டிய அலையா விருந்தாளி...அலேக்காக பிடித்த வனத்துறையினர்.!!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவில் உட்பட்ட பூதப்பாண்டி அருகே உள்ள தெரிசனங்கோப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் ராகேஷ்வரன். இவரது வீட்டில் சமையல் அறையில் கொடிய விஷமுடைய நல்ல பாம்பு புகுந்து கொண்டது.

இதனை பார்த்த ராகேஷ்வரன் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் வந்த வனத்துறையினர் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் கொடிய விஷமுடிய நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.