சென்னை விமான நிலையத்தில் இனி வெடுகுண்டு பயமில்லையா? எப்படி??

சென்னை விமான நிலையத்தை, வெடிகுண்டுகளில் இருந்து பாதுகாக்க, பாதுகாப்பு படை வீரர்களுக்கு புதிய நண்பர்கள் வந்துள்ளனர். அவர்கள் யார் என பார்க்கலாம்!!!

சென்னை விமான நிலையத்தில் இனி வெடுகுண்டு பயமில்லையா? எப்படி??

சென்னை விமானநிலையத்தில், வெடிகுண்டுகளை கண்டுப்பிடிக்கும்,அதிக மோப்ப சக்தியுடைய,  "பெல்ஜியம் மெலினோஸ்" இனத்தை சோ்ந்த இரு மோப்ப நாய்கள் வரும் டிசம்பரிலிருந்து பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமானநிலையத்தில் இந்த மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள, மத்திய தொழில் பாதுகாப்பு படையினா், தங்களுக்கு உதவும் வகையில், மோப்பநாய்களை பயன்படுத்தி வருகின்றனா். அந்த விதத்தில் வெடி மருந்துகள்,வெடிகுண்டுகள் போன்ற அபாயகரமான பொருட்களை கண்டுப்பிடிக்க  மோப்ப நாய்களை பயன்படுத்துகின்றனா்.

 இந்நிலையில் தற்போது சென்னை விமான நிலையத்தில் மோப்பநாய் பிரிவில்,புதிய வரவாக பெல்ஜியம் நாட்டின், பெல்ஜியம் மெலினோஸ் (Belgian Malinois) இனத்தைச் சேர்ந்த இரண்டு நாய் குட்டிகள் புதிதாக  சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வகை நாய்கள், சர்வதேச அளவில், மோப்ப சக்தியில் சிறந்து விளங்கக் கூடியவைகள். இந்திய விமான நிலைய ஆணையத்தின் கீழ் இந்தியாவில்  உள்ள, விமான நிலையங்களில்,முதல் முறையாக  சென்னை விமான நிலையத்தில்  இவை சேர்க்கப்பட்டுள்ளன.

பைரவா மற்றும் வீரா என்று இந்த மோப்ப நாய்குட்டிகளுக்கு  பெயர்கள்  சூட்டப்பட்டுள்ளன. இந்த நாய்குட்டிகள் தற்போது, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளிக்கு, ஆறு மாதப் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளன. அங்கு வெடிபொருட்கள், வெடிகுண்டுகள், வெடி மருந்துகளை கண்டறியும் பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மோப்ப பயிற்சியில் சிறப்பாக செயல்படுவதாக, பயிற்சி வழங்குவோர் தெரிவித்துள்ளனர்.

இந்த இரு நாய் குட்டிகளான பைரவா மற்றும் வீரா வரும் நவம்பர் இறுதியில் 6 மாதகால  பயிற்சியை நிறைவு செய்கின்றன. அதன்பின்பு வரும் டிசம்பா் மாதம் முதல் வாரத்தில் பைரவா, வீரா சென்னை விமானநிலையத்தில் தங்களது  பணியை தொடங்க உள்ளன.சென்னை விமானநிலைய அதிகாரிகள் இந்த தகவலை தெரிவிக்கின்றனா்.