வேளாண் பட்ஜெட்  : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்!!

2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

வேளாண் பட்ஜெட்  : அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்!!

2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

அப்போது, ஏற்றம் பெரும் மாற்றுப்பயிர் திட்டத்தின் கீழ் 16 கோடியில் 20 ஏக்கரில் செயல்படுத்தப்படும் எனவும் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 195 ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பனை மேம்பாட்டிற்காக ரூ.2.65 கோடியும், பண்ணை இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க ரூ.150 கோடியும், முதலமைச்சரின் சூரியசக்தி பம்பு செட் திட்டத்திற்காக 65 கோடியே 34 ஆயிரம் மதிப்பில் 3,000 பம்பு செட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

145 சூரியசக்தி உலர்த்திகள் ரூ.3 கோடியும், 50 உழவர் சந்தைகளை சீரமைக்க ரூ. 15 கோடி மற்றும் 10 உழவர் சந்தைகளை அமைக்க ரூ. 10 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு உழவர் சந்தையில் மாலையில் சிறுதானியங்கள், பயறுவகைகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்த அவர்,  மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறினார். 

மேலும் திண்டிவனம், தேனி மற்றும் மணப்பாறையில் ரூ.381 கோடியில் மூன்று மிகப்பெரிய அளவிலான உணவுப் பூங்காக்கள்,

கிராம அளவிலான மதிப்பு கூட்டல் மற்றும் சந்தைப்படுத்தல் மையங்கள் 38  கிராமங்களில் அமைக்க ரூ. 95 கோடியும், 

5 தொழில் கற்கும் சிறுமையங்கள் அமைக்க 3 கோடியும் 295 மதிப்பு கூட்டும் மையங்கள் அமைப்பதற்கு ரூ.5 கோடியும் சென்னை மற்றும் திருச்சியில் எஞ்சிய நச்சு பகுப்பாய்வு ஆய்வகங்கள் அமைக்க ரூ. 15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

பொது, தனியார் பங்கேற்பு முறையில் தேனி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில், மொத்த காய்கறி விற்பனை வளாகங்கள் அமைத்து, 

அருகாமையில் உள்ள மாநில வியாபாரிகள் தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வசதிகள் செய்யப்படும் எனவும் வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.