வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ஒரு பயனுமில்லை - இபிஎஸ் குற்றச்சாட்டு

வேளாண் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு  ஒரு பயனுமில்லை - இபிஎஸ் குற்றச்சாட்டு
Published on
Updated on
1 min read

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும், வேளாண் மானிய கோரிக்கையில் இடம்பெற்றவை தான், பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை

மேலும், வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை என கூறிய அவர், கரும்புக்கு ஆதார விலை உயர்த்தப்படும் என்ற திமுக வாக்குறுதி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்றும், நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 தராமல், ஊக்கதொகை என ஏமாற்று வேலையை திமுக அரசு செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.நெல் மூட்டைகளை பாதுகாக்க கவனம் செலுத்தவில்லை என குறிப்பிட்ட அவர், வேளாண் பட்ஜெட் ஏமாற்றும் வகையில் உள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.

குடிமாராமத்து திட்டத்தை  திமுக கைவிட்டுவிட்டது 

அதிமுக ஆட்சியில் குடிமாராமத்து திட்டத்தை கொண்டு வந்தாக கூறிய அவர், ஆனால் அந்த திட்டத்தையே திமுக கைவிட்டுவிட்டது என்றும், குடிமாராமத்து பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யாதது கண்டனத்திற்குறியது என்றும் குறிப்பிட்டார். திமுக அரசு வரும்போதெல்லாம் மின் தட்டுப்பாடு ஏற்படும், தமிழ்நாட்டில் மின் வெட்டு இல்லை என்றால் ஏன் விவசாயிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், துரோகிக்கு அடையாளம் செந்தில் பாலாஜி தான் என்றும், துரோகத்தை பற்றி அவர் பேசக்கூடாது எனவும் தெரிவித்தார்.

 ஈரோடு - 44 ஆயிரம் போலி வாக்குகள்

திமுகவில் பல்வேறு சீனியர்கள் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி பேட்டியளிக்கிறார் என குறிப்பிட்ட அவர், தமிழக வரலாற்றில் ஈரோடு கிழக்கு தொகுதி போன்ற இடைத்தேர்தலை சந்திக்கவில்லை என்றும், 44 ஆயிரம் போலி வாக்குகள் ஈரோடு கிழக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஜனநாயக முறைபடி தேர்தல் நடந்திருந்தால் அதிமுக தான் வெற்றி பெற்றிருக்கும் என்றும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com