"மதுர குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டுப் பாடு"...மருத்துவமனையில் குத்தாட்டம் போட்ட வாலிபர்கள்....!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நண்பரை பார்க்க சென்ற வாலிபர்கள் குத்தாட்டம் போட்டு நண்பரை மகிழ்வித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

"மதுர குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டுப் பாடு"...மருத்துவமனையில் குத்தாட்டம் போட்ட வாலிபர்கள்....!!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்த குழித்துறை பகுதியை சேர்ந்தவர் சர்ஜின். டிக்டாக் ல் பிரபலம் அடைந்த இந்த வாலிபர் நேற்று மார்த்தாண்டபம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது நண்பர் காட்வின் என்பவரை சக நண்பரோடு பார்க்க சென்றுள்ளார். 

அப்போது அவர் உடலில் குளுக்கோஸ் செலுத்தப்பட்ட நிலையில் படுக்கையில் சோர்வாக இருப்பதை கண்டு சர்ஜின் அவரை மகிழ்விக்கும் விதமாக செல்போனில்

"மதுர குலுங்க குலுங்க நீ நையாண்டி பாட்டுப் பாடு"

"புழுதி பறக்க பறக்க நீ போடாத ஆட்டம் போது"

என்ற பாடல் வரிகளை ஒலிக்க செய்து நண்பருடன் இணைத்து குத்தாட்டம் போட்டு அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நண்பரை மகிழ்விப்பதாக எண்ணி மருத்துவமனையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போது மருத்துவமனையில் இருதயம் சம்பந்தப்பட் பிற சிகிச்சைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என சுட்டி காட்டும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் மருத்துவமனை போன்ற இடங்களில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர்