மதிப்பெண் வந்தவுடன் கால்நடை மருத்துவபடிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்

மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் கால்நடை மருத்துவபடிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதிப்பெண் வந்தவுடன் கால்நடை மருத்துவபடிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்

மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் கால்நடை மருத்துவபடிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னை வேப்பேரியில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்,

கால்நடை ஆராய்ச்சி நிலையம், மருத்துவமனை இவற்றில் என்ன என்ன பணிகள் நடைபெறுகிறது என்பதை நேரில் ஆய்வு செய்தோம். நாய்களின் ரத்த மாதிரிகளை சேமித்து வைக்கும் நிலையங்களும் இங்கு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற அவர் சென்னை மட்டும் அல்லாமல் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து இங்கு சிகிச்சைக்காக வரும் அளவிற்கு சிறப்புமிக்க கால்நடை மருத்துவமனையாக நடைபெற்று கொண்டு இருக்கிறது என்றார். 

மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வந்தவுடன் கால்நடை மறுத்துவபடிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் கால்நடைகளுக்கான உணவுகள்,மற்றும் உடல் பரிசோதனை சம்மந்தமான அனைத்து உதவிகளையும் பெறுவதற்காக தமிழகத்தில் உள்ள அந்ததந்த மாவட்டங்களில் சங்கங்கள் உள்ளது அவர்கள் எந்த நேரத்தில் உதவி கேட்டாலும் செய்ய தயாராக இந்த அரசு உள்ளதாகவும் அவர் கூறினார்.