அதிமுக தேர்தல் பணிக்குழுவில்...கூடுதலாக 5 பேர் இணைப்பு...!

அதிமுக தேர்தல் பணிக்குழுவில்...கூடுதலாக 5 பேர் இணைப்பு...!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் பணிகளுக்கான குழுவில் மேலும் 5 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு இடைத்தேர்தல் :

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பையடுத்து, அனைத்துக் கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இதையும் படிக்க : சுத்துவதற்கு முன்பே...கழன்று விழுந்த போல்ட்...பிறகு நடந்தது என்ன?

தேர்தல் பணிக்குழு பட்டியல் :

ஆனால், இன்னும் அதிமுக தரப்பில் யார் வேட்பாளர் என்று அறிவிக்கவில்லை. இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டது. இதில் அவைத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 106 பேர் இடம்பெற்றிருந்தனர். 

கூடுதல் பொறுப்பாளர் நியமனம் :

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தேர்தல் பணிகளுக்கான 106 பேர் கொண்ட குழுவில் மேலும் 5 பேர் கூடுதல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, ஏற்கெனவே தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களுடன் புதிதாக முன்னாள் அமைச்சர் மாபா. பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர்  சுதா கே. பரமசிவன், கழக அமைப்புச் செயலாளர்  P.G. ராஜேந்திரன், A.K. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளர்  சரவணபெருமாள் ஆகியோர் பணியாற்றுவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.