போதை ஆசாமிகளே, பாத்து பேசுங்க..! இனிமே ஓடவும் முடியாது....! ஒளியவும் முடியாது....!

போதை ஆசாமிகளே,  பாத்து பேசுங்க..!  இனிமே ஓடவும் முடியாது....! ஒளியவும் முடியாது....!
Published on
Updated on
1 min read

சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுவோர் மீதும் அனுமதியின்றி செயல்படும் மதுபானக்கூடங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா தெரிவித்தார்.

போக்குவரத்து போலீசார் வாகன சோதனையின்போது விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது, போக்குவரத்து போலீசார் மீது எழும் புகார்களை தடுக்கவும், போலீசாரிடம் தகராறு செய்பவர்களை கண்டறியவும் போலீசார் சட்டைகளில்  கேமரா பொருத்தப்பட்டு அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், எட்டு மணி நேரம் செயல்படும் திறன் கொண்ட இந்த சட்டையில் பொருத்தப்படும் கேமராக்கள்; திருச்சி மாநகர போக்குவரத்து ரோந்து போலீசாருக்கு வழங்கும் நிகழ்வு மன்னார்புரத்தில் நடைபெற்றது. மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா பங்கேற்று மாநகர ரோந்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் என 54 பேருக்கு சட்டையில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்களை வழங்கி, குற்றச்சம்பவங்களை தடுக்கவும் அதேநேரம் போக்குவரத்து விதிமீறல்களை தொடர்ந்து சரி செய்யவும் முளைப்புடன் செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல் ஆணையர் சத்யபிரியா கூறுகையில்,  இந்த கண்காணிப்பு கேமரா வழக்குகளுக்கு பெரும் உதவியாக இருக்கும், இதனால், குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் நேரில் சென்று பதிவு செய்ய உதவியாக இருக்கும் என்றும், குறைந்தபட்சம் 5 மீட்டர் முதல் 10 மீட்டர் வரையிலான இடத்தில் நடைபெறுவதை துல்லியமாக வீடியோ பதிவு செய்ய இயலும் என்றார்.

அதோடு, திருச்சி மாநகரில் மதுபான குற்ற வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், டாஸ்மாக் மதுபான பார்களில் சட்டவிரோத மது விற்பனை மற்றும் முறைகேடான மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றும் கூறினார். 

மேலும் திருச்சி மாநகரில் 52 மதுபானம் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன  என்றும், அதேநேரம் அனுமதி இல்லாமல் மதுபான கூடங்கள் செயல்பட்டு வந்தால் அதனை ரைடு செய்து சீல் வைக்கவும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்  என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com