எங்குமே நடக்காதது போல, PSBB பள்ளி பாலியல் விவகாரத்தை மட்டும் பெரிதுப்படுத்துவதா? சீறும் காயத்ரி ரகுராம்!!

எங்குமே நடக்காதது போல, PSBB பள்ளி பாலியல் விவகாரத்தை மட்டும் பெரிதுப்படுத்துவதா? சீறும் காயத்ரி ரகுராம்!!

பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் தவறுக்கு அவரை மட்டும் தண்டிக்காமல், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்துக்காக ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் மதுவந்தியை விமர்சிப்பதா என நடிகை காய்த்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக பாஜக கலை இலக்கிய பிரிவு தலைவரான காயத்ரி, பிஎஸ்பிபி விவகாரத்தில் கருத்து தெரிவிக்க தொடங்கியுள்ளார். அண்மையில் இதுகுறித்து பேசிய அவர் பிஎஸ்பிபி பள்ளியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் பிரச்னைகளை, மாடல் அழகி ஒருவர் வெளிகொண்டு வந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். 

இந்த விவகாரத்தில் குற்றம் இழைத்த ஆசிரியரை மட்டும் தண்டிப்பதை விடுத்து, பள்ளி நிர்வாகத்தையும், பள்ளியையும் தண்டிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டுள்ளார். பாஜக ஆதரவாளர்கள் என்ற ஒரு காரணத்துக்காக மதுவந்தி டார்கெட் செய்யப்படுவதாகவும், வேறு சிலர் சாதி ரீதியாக பேசி பள்ளியை வீழ்த்த நினைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

பிராமண சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதோடு, பள்ளி நிர்வாகத்துக்கு நெருக்கமான குடும்பத்தைச் சேர்ந்த, எனக்கும் அந்தப் பள்ளியில் 'சீட்' கிடைக்கவில்லை தான். அதற்காக, அந்தப் பள்ளி மீது அவதுாறு பரபரப்ப முடியுமா என காயத்ரி ரகுராம் வினவியுள்ளார். 

புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக, கொரோனாவை மறைக்கவே, இதனை ஒரு கருவியாக பயன்படுத்தி வருவதாகவும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் சொல்கிறார் என்றால், என்ன அர்த்தம்?  பிராமணர் நடத்தும் பள்ளி, சிறப்பாக நடத்தப்பட்டு வந்தால், அதை அரசு ஏற்று நடத்துமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

ஒரு விஷயத்தை மடைமாற்றம் செய்வதற்காக, காங்., தான், இப்படிப்பட்ட காரியங்களை செய்து வந்தது. இப்போது, தி.மு.க.,வும் செய்யத் துவங்கி இருக்கிறது. குற்றம் என்றால் எல்லாமே குற்றம் தான். முதல்வர் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில், ஆங்கில மொழியில் பேசவில்லை என்றால், அபராதம் விதிக்கின்றனர். தாய் தமிழ் மொழியில் பேசக் கூட, சுதந்திரம் இல்லாமல் தான், அங்கே குழந்தைகள் தத்தளிக்கின்றனர். இப்பள்ளிகளை எல்லாம் அமைச்சர் அன்பில் மகேஷ் அரசு உடைமை ஆக்குவாரா? என்றும் சீறியும் உள்ளார் காய்த்ரி ரகுராம்.

தாங்களும் ராஜகோபாலன் உள்ளிட்ட பத்மா சேஷாத்ரி பள்ளியின் ஆசிரியர்கள் சிலரால், பாலியல் சீண்டலுக்கு ஆளானோம் என, சுமார் 50 மாணவிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.  இதேபோல் முன்வந்து மேலும் சில பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் குறித்து விசாரித்தால், அவர்கள் எல்லாம், 10 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்று சென்று விட்டவர்களாம்.

 இதனால், மாணவியர் குறிப்பிடும் பாலியல் சீண்டல் விவகாரத்தில், எவ்வளவு துாரம் உண்மை இருக்கிறது என்பதை அறிய போலீசார் தடுமாறி கொண்டிருக்கிறார்கள்!!