மாஜி அமைச்சரிடம் ரூ.10 கோடி கேட்கும் பாலியல் புகார் அளித்த நடிகை!  

திருமணம் செய்து கொள்வதாக கூறி  நடிகையை மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குப் தொடர்ந்துள்ளார்.

மாஜி அமைச்சரிடம் ரூ.10 கோடி கேட்கும் பாலியல் புகார் அளித்த நடிகை!   

திருமணம் செய்துகொள்வதாக ஆசைகாட்டி நெருக்கமாக பழகி சென்னை பெசன்ட் நகரில் தனி வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும், கட்டாயப்படுத்தி 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பரபரப்பு புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் அடையார் மகளிர் போலீசார் மணிகண்டன் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் தலைமறைவான மணிகண்டனை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் தேடி சென்றனர். பின்னர் கடந்த மாதம் 20-ந்தேதி அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சைதாப்பேட்டை ஜெயிலிலேயே அடைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி  நடிகையை மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நடிகை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குப் தொடர்ந்துள்ளார். சென்னையில் இருந்துகொண்டு வழக்கை நடத்த வேண்டும் என்ற காரணத்தினாலும் தனக்கு மாதாந்திர இடைக்கால தொகை வழங்க வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் போது பிரச்சனை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு மீதான விசாரணையை வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி விசாரணைக்கு  எடுத்துக்கொள்ள இருப்பதாக சைதாப்பேட்டை நீதிமன்றம் தெரிவித்துள்ளது