நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்: விரைவில் கைது நடவடிக்கை?

சமூக வலைதளத்தில் பட்டியல் சமூகத்தினர் குறித்து அவதூறாகப் பேசிய நடிகை மீரா மிதுனுக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன்: விரைவில் கைது நடவடிக்கை?
தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்தும், அழகி போட்டிகளில் பங்கெடுத்தும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். அடிக்கடி சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் மீரா மிதுன் மீது, பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், பட்டியல் சமூகப் பிரிவைச் சேர்ந்த இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் குறித்து கொச்சையாகப் பேசிய மீரா மிதுன், திரைத்துறையில் இருந்து பட்டியல் சமூகத்தினரை அகற்ற வேண்டும் எனவும், அப்பிரிவைச் சேர்ந்த அனைவரும் குற்றப் பின்னணி உடையவர்களாக இருப்பதால் தான் அவர்களை அனைவரும் தூற்றுவதாகவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார்.
இதனால், மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், வழக்குத் தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு,  மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.