"சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது" எஸ்.வி.சேகர்!

சனாதனத்தை  யாராலும் ஒழிக்க முடியாது என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.

சிவந்தி ஆதித்தனாரின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட புகைப்படத்திற்கு எஸ்.வி.சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தினத்தந்தியின் அதிபர் சிவந்தி ஆதித்தனார் எனது நல்ல நண்பர், நல்ல வழிகாட்டியாக 1973 இல் நாடக குழு ஆரம்பத்தில் இருந்து மிகவும் ஊக்கப்படுத்தியவர்

தமிழுக்காக அவர் செய்த சாதனைகள் ஏராளம் கல்விக்காக அவர் ஆற்றிய தொண்டால், நிறைய மாணவர்கள் படித்து நல்ல இடத்தில் இருப்பதற்கு சிவந்தி ஆதித்தனாரின் சேவை அளப்பெரியது. அவர் செய்துவிட்டு சென்ற நன்மைகள் தான் அவர் இல்லை என்றாலும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது.

அண்ணாவை பற்றி அண்ணாமலை பேசியது தொடர்பான கேள்விக்கு, அண்ணாமலைக்கு அனுபவ முதிர்ச்சி என்பதை விட ஆரம்ப கட்ட அனுபவமே அரசியலில் இல்லை என்பதுதான் அவர் பேசியதின் வெளிப்பாடு எனக் கூறிய அவர், கூட்டணி இல்லை என்றால் ஆரம்பத்திலேயே அதனை முடித்துக் கொள்ள வேண்டும், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஜெபி. நட்டா போன்றவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார். 

ஒரு கட்சியின் கொள்கை கோட்பாடு மேல் இடத்தில் சொல்வதைக் கேட்டு நடப்பது, அதைவிட்டு அவர் செய்வது அனைத்தும் அவருடைய பெயரையும் புகழையும் வளர்த்துக் கொள்வதற்காக சுயநலமாக நடந்து கொள்கிறார். அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி நிலைக்காது, இருக்காது என தெவரிவித்த அவர், கட்சி வளர்ந்திருக்கிறதா? பலம் பெற்று இருக்கிறதா? தேர்தலுக்கு பின்பு தான் தெரியும் எனக் கூறினார்.

சனாதனம் என்பது வாழ்க்கை முறை அதனை யாராலும் ஒழிக்க முடியாது எனக் கூறிய எஸ் வி சேகர், அண்ணாமலை பத்து வருடமாக போலீசாக இருந்ததாக கூறுகிறார். 10 வருடத்தில் ஒரு முறையாவது டிரிகர் அழுத்தி இருப்பாரா அண்ணாமலை என கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர், மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெறுவார். ஆனால் தமிழ்நாட்டில் பாஜகவில் அண்ணாமலை  இருந்தால் ஒரு ஓட்டு கூட விழாது என தெரிவித்தார்.

இதையும் படிக்க