நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி...!!

நன்றி தெரிவித்த நடிகர் கார்த்தி...!!

கடந்த செவ்வாய் கிழமை தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் வேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது.  இதில் விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் பல திட்டங்களும் அறிவிப்புகளும் வெளியாகியிருந்தன.

இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கார்த்தி முதலமைச்சருக்கு நன்றி கூறியுள்ளார்.  அதாவது 2023-24-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டில் நல்ல திட்டங்களை அறிவித்துள்ளதாக முதலமைச்சருக்கு நடிகா் காா்த்தி நன்றி தொிவித்துள்ளாா்.

மேலும் இதுகுறித்து அவா் உழவன் பவுண்டேஷன் மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் பட்ஜெட்டில் முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், உழவர்களின் தேவைகளை மிக நுணுக்கமாக ஆராய்ந்து பட்ஜெட்டில் அறிவித்திருப்பதில் பெரும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட அவா்  நல்ல திட்டங்களை அறிவித்துள்ள முதலமைச்சா் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியை  தொிவித்து கொள்வதாகவும் தொிவித்துள்ளாா். 

இதையு படிக்க:   இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாட்டின் விருதுநகரில்....!!