மனித உரிமைகள் பெயரை, தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் நடவடிக்கை - டிஜிபி சைலேந்திர பாபு

மனித உரிமைகள் பெயரை, தனியார் அமைப்புகள்  பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.

மனித உரிமைகள் பெயரை, தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் நடவடிக்கை - டிஜிபி சைலேந்திர பாபு

இதுதொடர்பாக காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆணையர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், சில தனியார் அமைப்புகள் மனித உரிமை என்ற பெயரில், மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமை அமைப்புகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் என்ற பெயரை நீக்கி, தனியார் அமைப்பு என்று பதிவிட சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்தும், மீறப்படுவதாக அதில் கூறப்படுகிறது.

எனவே  போலியாக மனித உரிமை என்ற பெயரில் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றி திரிவோர் மீதும், மனித உரிமைகள் என்ற பெயரை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபடுவோர் மீதும்  சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.  

மேலும் சட்ட நடவடிக்கை மேற்கொண்ட விவரங்களை டிஜிபி அலுவலகத்திற்கு அனுப்பவும் அறிவுறுத்தியுள்ளார்.