வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் நடந்த அதிரடி சோதனை... ரூ. 5 லட்சம் , 100 பவுன் நகை பறிமுதல்

தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் நடந்த அதிரடி சோதனை... ரூ. 5 லட்சம் , 100 பவுன் நகை பறிமுதல்

தஞ்சாவூரில் வட்டார போக்குவரத்து அலுவலர் வீட்டில் 13 மணி நேரம் நடந்த சோதனையில் 5 லட்சம் ரொக்கம், 100 பவுன் தங்க நகை, வீடு, பெட்ரோல் பங்கிற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சை மருத்துவ கல்லூரி சாலையில் உள்ள, புதுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர் வீடு மற்றும் பெட்ரோல் பங்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் சோதனை செய்தனர்.

அதிகாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில், அவரது வீட்டில் இருந்து கணக்கில் வராத 5 லட்சம் ரொக்கம், வீடு, பெட்ரோல் பங்கிற்கான ஆவணங்கள்,  100 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.