ஒரு பக்கம் தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது.. மறுபக்கம் இந்தியில் திமுக தலைவருக்கு விளம்பரம் - ஓ.பன்னீர்செல்வம் கண்டன அறிக்கை

இந்தி மொழி விஷயத்திலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது என ஓ.பன்னீர்செல்வம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஒரு பக்கம் தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது.. மறுபக்கம் இந்தியில் திமுக தலைவருக்கு விளம்பரம் - ஓ.பன்னீர்செல்வம் கண்டன அறிக்கை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தித் திணிப்பு என்று கூறி தமிழுக்கு போராடுவது போல் நடிப்பது, மறுபக்கம் இந்தியில் திமுக தலைவரை விளம்பரப்படுத்துவது என திமுக இரட்டை வேடம் போடுகிறது என தெரிவித்துள்ளார்.

பேரறிஞர் அண்ணா கூறிய இருமொழிக் கொள்கையில் ஒன்றான ஆங்கிலத்தை பயன்படுத்துவதற்குப் பதில் ஏன் மும்மொழிக் கொள்கையில் ஒன்றான இந்தியை திமுக தலைவர் பயன்படுத்துகிறார் என்று மக்கள் கேட்க ஆரம்பித்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

 மேலும் திமுகவின் இச்செயலைப் பார்க்கும்போது  இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே என்ற எம்.ஜி. ஆரின் பாடலை வரிகளை மேற்கொள்காட்டியுள்ளார். திமுகவின் செயல்பாடுகளைக் கண்டு மக்கள் பெருந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், இந்த ஏமாற்றம் வருங்காலத்தில் தமிழகத்தில் மிக பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.