ஏ.டி.எம்- கொள்ளையனை காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல்!

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்-களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதாகியுள்ள குற்றவாளி அமீர் அர்ஜை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.

ஏ.டி.எம்- கொள்ளையனை காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல்!

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்-களில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கைதாகியுள்ள குற்றவாளி அமீர் அர்ஜை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் இன்று மனுத்தாக்கல் செய்தனர்.

சென்னையில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம் டெபாசிட் மிஷின்களை குறிவைத்து ஹரியானா மாநில கொள்ளை கும்பல் நூதனை முறையில் கொள்ளைச் சம்பவங்களை கடந்த 17 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை அரங்கேற்றி பணத்துடன் தப்பிச் சென்றது. வேளச்சேரி, தரமணி, வளசரவாக்கம், வடபழனி, கீழ்ப்பாக்கம், கோட்டூர்புரம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளின் ஏ.டி.எம் டெபாசிட் மிஷின்களில் தங்கள் கைவரிசைகைக் காட்டி சுமார் 50 லட்சம் ரூபாய் வரை பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது.

வங்கி மேலாளர்களின் புகாரின் அடிப்படையில் தியாகராய நகர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்ற நிகழ்விடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டு குற்றவாளிகளின் அடையாளம் கண்டறிந்தனர். பின்னர் குற்றவாளிகளைத் தேடி ஹரியானா சென்ற தனிப்படையினர் கடந்த 23 ஆம் தேதி ஹரியானா மாநிலம் மேவாட் மாவட்டத்தில் வைத்து குற்றவாளிகளுள் ஒருவரான அமிர் அர்ஜ் என்பவரை கைது செய்தனர்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் முகாமிட்டு அடையாளம் காணப்பட்ட பிற குற்றவாளிகளை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவத்தில் கைதான அமீர் அர்ஜ் நேற்று விமானம் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டார். பின்னர் பூந்தமல்லி நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் இல்லத்தில் அமீர் ஆஜர்படுத்தப்பட்டு வரும் ஜூலை 8 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் குற்றவாளி அமீர் அர்ஜை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.